ஸ்குவாஷ் போட்டி: ஜோஷ்னா-வேலவன் ஜோடி கால் இறுதிக்கு தகுதி

ஜோஸ்னா- வேலவன் ஜோடி 11-7, 11-10 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றது.
Joshnna chinnappa- velavan
Published on

ஆசிய விளையாட்டு போட்டியில் ஸ்குவாஷ் பந்தயத்தில் இந்தியா சார்பில் 4 வீரர்கள், 4 வீராங்கனைகள் என 8 பேர் பங்கேற்றுள்ளனர்.

ஜோஸ்னா ஜோடி

கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் ஜோஸ்னா சின்னப்பா- வேலவன் செந்தில் குமார் ஜோடி கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் சக நாட்டை சேர்ந்த சூரச் சந்த்- ஷமீனா ரியாஸ் ஜோடியை எதிர்கொண்டது.

ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற ஜோஸ்னா- வேலவன் ஜோடி 11-7, 11-10 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றது.

ஒற்றையர் பிரிவு

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை தன்விகண்ணா கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் சிங்கப்பூர் வீராங்கனையை சந்திக்கிறார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அபய் சிங் இலங்கை வீரரையும், வீர் சோட்ரனி மலேசிய வீரரையும் சந்திக்கிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com