ஆசிய பாரா விளையாட்டு: வட்டு எறிதலில் தங்கம், வெள்ளி வென்ற இந்தியர்கள்

ஈரானின் அலிரேசா ஹேமாமி மூன்றாவது இடம் பிடித்து வெண்கலம் வென்றார்.
pranav soorma
Published on: 
Summary

ஆசிய பாராலிம்பிக் போட்டிகளில் வட்டு எறிதலில் இந்தியாவின் பிரணவ் சூர்மா தங்கமும், ராம் ரதன் சிங் வெள்ளி பதக்கமும் வென்றனர்.

ஆசிய பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் அயிச்சி நகோயா நகரில் நடந்து வருகிறது. வரும் 24-ம் தேதி வரை பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில், இந்திய வீரர்கள் பதக்கங்களைக் குவித்து வருகின்றனர்.

வட்டு எறிதல்

இந்நிலையில், ஆண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் பிரணவ் சூர்மா ஆசிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றுள்ளாார்.

மற்றொரு இந்திய வீரர் ராம்ரதன் சிங் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

தங்கப் பதக்கம் வென்ற பிரணவ்

பிரணவ் சூர்மா 11.66 மீட்டர் தூரம் வட்டு எறிந்து புதிய ஆசிய சாதனையைப் படைத்தார். தனது நான்காவது முயற்சியில் இந்தத் தூரத்தை எட்டிய அவர், 932 ராசா புள்ளி பெற்று முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.

வெள்ளி வென்ற ராம் ரதன் சிங்

இதில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரரான ராம் ரதன் சிங், 10.35 மீட்டர் தூரம் வட்டு எறிந்து 809 ராசா புள்ளி பெற்றார். இதன் மூலம் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஈரானின் அலிரேசா ஹேமாமி மூன்றாவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com