ஆசிய பாரா விளையாட்டு: தடகளத்தில் இந்திய வீராங்கனைகள் தங்கம், வெண்கலம் வென்று அசத்தல்

ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் இந்தியா இதுவரை 7 தங்கம் வென்றுள்ளது.
athelets
Published on: 
Summary

ஆசிய பாராலிம்பிக் போட்டிகளில் பெண்களுக்கான டி12 பிரிவு ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் சிம்ரன் சர்மா தங்கமும், தேஜல்பென் டாமோர் வெண்கலமும் வென்றனர்.

ஆசிய பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் அயிச்சி நகோயா நகரில் நடந்து வருகிறது. வரும் 24-ம் தேதி வரை பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன.

இதில் பெண்களுக்கான டி12 தடகளப் பிரிவு போட்டி இன்று நடைபெற்றது.

தங்கம் வென்ற சிம்ரன் சர்மா

இதில் இந்தியாவின் சிம்ரன் சர்மா 24.80 விநாடிகளில் இலக்கைக் கடந்து முதலிடம் பிடித்தார். இதன்மூலம் அவர் தங்கத்தைத் தட்டிச் சென்றார்.

ஈரான் வீராங்கனை ஹஜ்ஜார் சபார்சாதே வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

தேஜல்பென் வெண்கலம்

மற்றொரு இந்திய வீராங்கனையான தேஜல்பென் டாமோர் 25.23 விநாடிகளில் இலக்கைக் கடந்து வெண்கலம் வென்றார்.

30 ஆக உயர்வு

இதன்மூலம் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. இதில் 7 தங்கம், 10 வெள்ளி, 13 வெண்கலப் பதக்கம் அடங்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com