ஆசிய பாரா விளையாட்டு: தடகளத்தில் 2வது தங்கம் வென்று அசத்திய சிம்ரன்

நேற்று 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை சிம்ரன் தங்கம் வென்றிருந்தார்.
simran
Published on: 
Summary

ஆசிய பாராலிம்பிக் போட்டிகளில் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்ற சிம்ரன் இன்று 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

ஆசிய பாரா போட்டிகள் ஜப்பானின் அயிச்சி நகோயாவில் நடந்து வருகின்றன. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

பாரா ஆசிய விளையாட்டில் நேற்று 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை சிம்ரன் சர்மா தங்கம் வென்றிருந்தார்.

இந்நிலையில், பெண்களுக்கான 100 மீட்டர் டி12 தடகளப் போட்டியில் சிம்ரன் 12.02 விநாடியில் முதலிடம் பிடித்து தங்கம் வென்று அசத்தியுள்ளார். இதில் ஆசிய சாதனை ஆகும்.

ஆசிய பாரா விளையாட்டில் இந்திய வீராங்கனை சிம்ரன் இரு தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.

இதற்குமுன் 3 இந்தியர்கள் ஒரே தொடரில் இரண்டு தங்கம் வென்றிருக்கிறார்கள். இந்த வரிசையில் சிம்ரன் 4-வது வீரராக இணைந்துள்ளார்.

டி12 என்பது மிதமான பார்வைக் குறைபாடு கொண்ட வீரர், வீராங்கனைகளைக் குறிக்கும் வார்த்தையாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com