ஆசிய விளையாட்டு: செபக்டக்ராவில் வெண்கலம் வென்ற இந்தியா

இந்தப் பிரிவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா பெறும் முதல் பதக்கம் இது.
indian mens
Published on: 
Summary

ஆசிய விளையாட்டுப் போட்டியில் செபக்டக்ரா ஆண்கள் குவாட்ரண்ட் பிரிவில் இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது.

ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானில் நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் தங்களது அபார திறமையால் தொடர்ந்து பதக்கங்களைக் குவித்து வருகின்றனர்.

இந்நிலையில், செபக்டக்ரா ஆண்கள் குவாட்ரண்ட் பிரிவில் இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது.

இந்தப் பிரிவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா பெறும் முதல் பதக்கம் இதுவாகும்.

ஜப்பானிடம் தோல்வி

அரையிறுதியில் இந்திய ஆண்கள் குவாட்ரண்ட் அணி, போட்டியை நடத்தும் ஜப்பான் அணியை எதிர்கொண்டது. பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 0-2 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.

முதல் செட்டில் இந்தியா 12 – 15 எனவும், இரண்டாவது செட்டில் இந்தியா 13 – 15 எனவும் எடுத்தது.

இரு செட்களிலும் இந்திய வீரர்கள் கடுமையாகப் போராடிய நிலையில், ஜப்பான் அணி இறுதியில் வெற்றியைப் பதிவு செய்தது.

தோல்வியிலும் கிடைத்த வெண்கலம்

செபக்டக்ரா போட்டி விதிமுறைகளின்படி, அரையிறுதியில் தோல்வியடையும் இரு அணிகளுக்கும் வெண்கலப் பதக்கம் வழங்கப்படுகிறது. இதனால், இந்திய அணிக்கு இந்தப் பிரிவில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெண்கலம் கிடைத்துள்ளது.

இந்தியாவின் 3-வது பதக்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் செபக்டக்ராவில் இந்தியா வெல்லும் 3-வது பதக்கம் இது.

2018 –ல் ஆண்கள் அணி, 2022 –ல் பெண்கள் அணி பிரிவு, தற்போதைய போட்டியில் ஆண்கள் குவாட்ரண்ட் பிரிவு வெண்கலம் வென்றுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com