

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி தோல்வி அடைந்தது.
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, மலேசியாவின் மேன் வெய் சோங் -டீ கெய் வூன் ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய மலேசிய ஜோடி 21-18, 21-19 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. இதன்மூலம் சாத்விக்-சிராக் ஜோடி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.