இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் சாத்விக்-சிராக் ஜோடி தோல்வி

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்திய ஜோடி தோல்வி அடைந்தது.
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் சாத்விக்-சிராக் ஜோடி தோல்வி
Published on

ஜகார்த்தா:

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதிசுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சிராக் ஷெட்டி-சாத்விக்ரங்கி ரெட்டி ஜோடி, மலேசியாவின் மான் வெய் சோங்-டீ கை வுன் ஜோடி உடன் மோதியது.

ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட மான் வெய் சோங்-டீ கை வுன் ஜோடி 21-19, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

இதன்மூலம் காலிறுதியில் தோல்வி கண்ட சிராக் ஷெட்டி-சாத்விக் ரங்கி ரெட்டி ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com