

சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் காலிறுதி சுற்றுக்கு இந்தியாவின் சாத்விக் சிராக் ஜோடி முன்னேறியது.
சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் அங்குள்ள ஷென்சென் நகரில் நடந்து வருகிறது. வரும் 6-ம் தேதியுடன் இந்தத் தொடர் முடிவடைகிறது.
இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2வது சுற்றில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி, பிரான்சின் கிறிஸ்டோ போபோவ் - டோமா போபோவ் ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய சாத்விக் சிராக் ஜோடி 21-17, 22-24, 21-9 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
ஏற்கனவே, ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்கள் ஒற்றையரில் லக்ஷயா சென்னும், பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் உன்னதி ஹூடா, தன்வி ஷர்மா ஆகியோர் தோல்வி அடைந்து வெளியேறினர்.