

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் பாங்காங்கில் நடந்து வருகிறது.
ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் முகமது ஹைகால்-பிரியன் ஜெரேமே ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய சாத்விக்-சிராக் ஜோடி 21-12, 21-19 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.