மக்காவ் ஓபன் பேட்மிண்டன்: இந்திய ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்

மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. ஆண்கள் இரட்டையரில் இந்திய ஜோடி 2வது சுற்றில் வெற்றி பெற்றது.
மக்காவ் ஓபன் பேட்மிண்டன்: இந்திய ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்
Published on

மக்காவ்:

மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடந்த 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, ஜப்பானின் ஹிரோகி நிஷி-காகேரு குமாகாய் ஜோடி உடன் மோதியது.

இதில் முதல் செட்டை 10-21 என இழந்த இந்திய ஜோடி அடுத்த இரு செட்களை 22-20, 21-16 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் சாய் பிரதீக்-பிருதிவி கிருஷ்ணமூர்த்தி ராய் ஜோடி, மலேசிய ஜோடியிடம் தோல்வி அடைந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com