கீர்த்தனாவுக்கு ரூ.1 கோடி... காசிமாவுக்கு ரூ.50 லட்சம்: ஊக்கத்தொகை வழங்கிய முதலமைச்சர் முக ஸ்டாலின்

காசிமாவை வாழ்த்தி, ரூ.50 லட்சத்துக்கான ஊக்கத் தொகையை முதலமைச்சர் வழங்கினார்.கீர்த்தனாவுக்கு ரூ.1 கோடி ஊக்கத் தொகை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார்.
கீர்த்தனாவுக்கு ரூ.1 கோடி... காசிமாவுக்கு ரூ.50 லட்சம்: ஊக்கத்தொகை வழங்கிய முதலமைச்சர் முக ஸ்டாலின்
Published on

உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் மாலத்தீவில் நடைபெற்றது. இதில் தமிழக வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தினர்.

சென்னை காசிமேட்டை சேர்ந்த முன்னாள் சாம்பியன் காசிமா கேரம் உலக கோப்பை ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார். மேலும், இரட்டையர் பிரிவில் வெள்ளியும், அணியாக தங்கமும் காசிமா வென்றார்.

அதே சமயம் சென்னை காசிமேட்டைச் சேர்ந்த கீர்த்தனா கேரம் உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

மகளிர் ஒற்றையர், இரட்டையர், அணி என 3 பிரிவுகளிலும் கீர்த்தனா தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்

இந்நிலையில் கேரம் உலக கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை காசிமாவை வாழ்த்தி, ரூ.50 லட்சத்துக்கான ஊக்கத் தொகை காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

கேரம் உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னையைச் சேர்ந்த கீர்த்தனாவுக்கு ரூ.1 கோடி ஊக்கத் தொகை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com