

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரின் 2வது சுற்றில் இந்தியாவின் ரக்ஷிதா ராம்ராஜ் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடந்து வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் ரக்ஷிதா ராம்ராஜ், சீனாவின் சென் யூபே உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ரக்ஷிதா ராம்ராஜ் 21-18, 24-22 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் அஷ்மிதா சலிஹா ஜப்பான் வீராங்கனையான ஹீனா அகேச்சியிடம் 17-21, 12-21 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.