சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: முதல் சுற்றில் இந்திய வீரர் ரஜாவத் தோல்வி

சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ரஜாவத் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார்.
சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: முதல் சுற்றில் இந்திய வீரர் ரஜாவத் தோல்வி
Published on

ஷென்ஜென்:

பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ளும் சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் இன்று தொடங்கியது.

இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் பிரியான்ஷு ரஜாவத், இந்தோனேசியாவின் வார்டயோ உடன் மோதினார்.

இதில் ரஜாவத் முதல் செட்டை 24-22 என கைப்பற்றினார். இதில் சுதாரித்த வார்டோய் அடுத்த செட்களை 21-13, 21-18 என வென்றார். 3வது சுற்றில் முன்னிலை பெற்ற ரஜாவத் கடைசியில் தோல்வி அடைந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com