ஆசிய விளையாட்டு: காலிறுதியில் பி.வி.சிந்து, உன்னதி ஹூடா அதிர்ச்சி தோல்வி

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் நடந்து வருகிறது.
pv sindhu
Published on: 
Summary

ஆசிய விளையாட்டுத் தொடரில் பேட்மிண்டன் போட்டியின் காலிறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து, உன்னதி ஹூடா ஆகியோர் அதிர்ச்சி தோல்வி அடைந்தனர்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

இந்தப் போட்டி 4 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும்.

இன்று பேட்மிண்டன் தனிநபர் பிரிவு காலிறுதி சுற்று போட்டிகள் நடைபெற்றன. இந்தியாவின் பி.வி.சிந்து, சீனாவின் சென் யூ பி உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து 21-11 என முதல் செட்டைக் கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்ட சீன வீராங்கனை அடுத்த இரு செட்களை 21-18, 21-10 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதன் மூலம் இந்தியாவின் பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

மற்றொரு போட்டியில் இந்தியாபின் உன்னதி ஹூடா 16-21, 21-14, 17-21 என்ற புள்ளிக் கணக்கில் ஜப்பானின் அகானே யமாகுச்சியிடம் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

பேட்மிண்டன் தனிநபர் பிரிவில் இந்திய வீரர், வீராங்கனைகள் ஏமாற்றம் அளித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com