பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து, தன்வி ஷர்மா முதல் சுற்றில் வெற்றி

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.
pv sindhu
Published on: 
Summary

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, தன்வி ஷர்மா வெற்றி பெற்றனர்.

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.

இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, தாய்லாந்தின் சுபனிதா கேடேதோங் உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய பி.வி.சிந்து 21-14, 8-21, 23-21 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் தன்வி ஷர்மா 21=12, 21-12 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனை இஷா பரூவாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com