ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் பி.வி.சிந்து ஏமாற்றம்

ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன் தொடர் பின்லாந்தில் நடைபெற்று வருகிறது.
pv sindhu
Published on: 
Summary

ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன் தொடர் பின்லாந்தில் நடைபெற்று வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, தாய்லாந்தின் ரட்சனோக் இன்தானன் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 11-21, 21-19, 18-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

ரட்சனோக் இன்தானனுக்கு எதிராக சிந்து சந்திக்கும் 10-வது தோல்வி இதுவாகும். இவர்கள் கடைசியாக விளையாடிய 6 போட்டிகளிலும் ரட்சனோக் இன்தானன் வெற்றி பெற்றுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com