இந்திய ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி

இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் தலைநகர் டெல்லியில் நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதியில் தோல்வி அடைந்தார்.
இந்திய ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி
Published on

புதுடெல்லி:

உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள கே.டி.ஜாதவ் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து, இந்தோனேசிய வீராங்கனை துன்ஜங்கை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய துன்ஜங் 21-9, 19-21, 21-17 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் பி.வி.சிந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com