டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் பி.வி.சிந்து போராடி தோல்வி

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி டென்மார்க்கில் நடந்து வருகிறது.
pv sindhu
Published on: 
Summary

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து போராடி தோல்வி அடைந்தார்.

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஒடென்சே நகரில் இன்று முதல் தொடங்கி வரும் 18-ம் தேதி வரை நடக்கிறது.

இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, தென் கொரியா அன்சே யங் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து முதல் செட்டை 21-13 என வென்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆடிய அன்சே யங் 2வது செட்டை 25-23 என கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் அதிரடியாக ஆடிய அன்சே யங் 21-19 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

அன்சே யங்குக்கு எதிராக இதுவரை 11 முறை மோதியுள்ள பி.வி.சிந்து, ஒரு போட்டியில்கூட வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் ஒற்றையரில் தன்வி ஷர்மாவும், ஆண்கள் ஒற்றையரில் கிடாம்பி ஸ்ரீகாந்தும் 2வது சுற்றுக்கு முன்னேறினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com