பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறினர் பி.வி.சிந்து, அஷ்மிதா சலிஹா

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.
pv sindhu
Published on: 
Summary

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதி சுற்றுக்கு இந்தியாவின் பி.வி.சிந்து, அஷ்மிதா சலிஹா ஆகியோர் முன்னேறினர்.

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.

இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் ரிகோ குஞ்சி உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய பி.வி.சிந்து 21-12, 21-16 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் அஷ்மிதா சலிஹா 21-19, 21-18 என்ற செட் கணக்கில் 3 முறை உலக சாம்பியனான ஜப்பானின் அகானே யமாகுச்சியை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com