புரோ கபடி லீக்: டை பிரேக்கரில் பெங்களூருவை வீழ்த்தியது புனேரி பல்தான்

புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. பெங்களூரு புல்ஸ் அணியை புனேரி பல்தான் அணி வீழ்த்தியது.
புரோ கபடி லீக்: டை பிரேக்கரில் பெங்களூருவை வீழ்த்தியது புனேரி பல்தான்
Published on

சென்னை:

12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சென்னையில் இன்று இரவு நடந்த ஆட்டத்தில் புனேரி பல்தான், பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.

ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடி புள்ளிகள் எடுத்தனர்.

இறுதியில், இரு அணிகளும் 29-29 என புள்ளிகள் எடுத்தன. இதனால் டை பிரேக்கர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

இதில் புனேரி பல்தான் அணி 6-4 என வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புனேரி பல்தான் அணி 9-வது வெற்றியைப் பதிவு செய்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com