ப்ரோ கபடி லீக் 2026 சீசன் நடைபெறுமா?

போட்டிக்கான ஒளிபரப்பு உரிமை தொடர்பான பேச்சுவார்த்தை இறுதியாகவில்லை.
ப்ரோ கபடி லீக்
ப்ரோ கபடி லீக்
Published on: 

கிரிக்கெட்டில் ஐ.பி.எல். நடைபெறுவது போன்று, கபடிக்கென ப்ரோ கபடி லீக் கடந்த 2014-ம் ஆண்டு தெடாங்கப்பட்டது. முதலில் 8 அணிகளாக இருந்தது. பின்னர் 12 அணிகளாக விரிவாக்கம் செய்யப்பட்டது.

2025 சீசனுடன் ஒளிபரப்பு உரிமை முடிவடைந்தது. ஜியோஸ்டார் 905 கோடி ரூபாய்க்கு உரிமம் பெற்றிருந்தது.

50 சதவீதம் தொகை குறைக்கக் கோரிய ஜியோ ஸ்டார்

தற்போது புதிய உரிமம் கோருகையில் அதில் 50 சதவீதம் கட்டணத்தை குறைக்க கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.

இது தொடர்பாக ஜியோ ஸ்டார், போட்டியை நடத்தும் உரிமையாளர் மாஷல் ஸ்போர்ட்ஸ் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை இன்னும் முடிவடையவில்லை.

ஐதராபாத்தை தளமாகக் கொண்ட 'தெலுங்கு டைட்டன்ஸ்' (Telugu Titans) அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாஸ் ஸ்ரீராமனேனி கூறுகையில், பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகத் தெரிவித்தார்.

இது முந்தைய ஒப்பந்தத்தைப் போலவே, வருவாயைப் பகிர்ந்து கொள்ளும் முறையையும், ஜியோஸ்டார் வழங்கும் குறைந்தபட்ச உத்தரவாதத் தொகையையும் (minimum guarantee) உள்ளடக்கியது.

இது அணிகளின் உரிமையாளர்களுக்கும் ஒளிபரப்பு நிறுவனத்திற்கும் இரு தரப்பிலும் சாதகமான ஒரு சூழலாகும். ஒப்பந்தத்திற்கான பார்முலா குறித்த உடன்பாடு எட்டப்பட்டுவிட்டது ஆனால் குறிப்பிட்ட தொகைகள் குறித்த விவாதங்கள் இன்னும் நடைபெற்று வருகின்றன" எனத் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக 2020-ம் ஆண்டு சீசன் நடைபெறவில்லை. அதன்பின் தற்போது இந்த ஆண்டு நடைபெற வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

X