புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணி வெற்றியுடன் தொடங்குமா? குஜராத்துடன் இன்று மோதல்

தமிழ் தலைவாஸ் அணியில் நட்சத்திர வீரர் பவன் செராவத் உள்ளார். நேற்றைய போட்டிகளில் டெல்லி, பெங்களூரு, உ.பி. ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணி வெற்றியுடன் தொடங்குமா? குஜராத்துடன் இன்று மோதல்
Published on

பெங்களூர்:

9-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நேற்று தொடங்கியது. இன்று மூன்று ஆட்டங்கள் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ்-புனேரி பால்டன் அணிகள் மோதுகின்றன.

இரவு 8.30 மணிக்கு நடக்கும் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி, குஜராத் ஜெயன்ட்சுடன் மோதுகிறது. இதில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் தலைவாஸ் அணியில் நட்சத்திர வீரர் பவன் செராவத் உள்ளார். இரவு 9.30 மணிக்கு நடக்கும் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ்-அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதுகின்றன. நேற்றைய போட்டிகளில் டெல்லி, பெங்களூரு, உ.பி. ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com