பாரா ஒலிம்பிக்: உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றார் பிரவீன் குமார்

இந்தியா இதுவரை 26 பதக்கங்களைப் பெற்றுள்ளது.இதில் 6 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் ஆகியவை அடங்கும்.
பாரா ஒலிம்பிக்: உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றார் பிரவீன் குமார்
Published on

பாரீஸ்:

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

இதுவரை இந்தியா 5 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்களைக் கைப்பற்றி உள்ளது.

இந்நிலையில், ஆண்கள் உயரம் தாண்டுதலில் இந்தியாவின் பிரவீன் குமார் தங்கப் பதக்கம் வென்றார். இது இந்தியாவுக்கு 6வது தங்கப் பதக்கம் ஆகும்.

அமெரிக்கா வெள்ளிப் பதக்கமும், உஸ்பெகிஸ்தான் வெண்கலமும் வென்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com