ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி - கோப்பை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

இந்தியா 4-3 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது.இதன்மூலம் இந்தியா 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி - கோப்பை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Published on

புதுடெல்லி:

7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

இந்நிலையில், ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், ஆசிய சாம்பியன்ஷிப்பில் அற்புதமான வெற்றியைப் பெற்ற ஆண்கள் ஹாக்கி அணிக்கு வாழ்த்துக்கள்! இது இந்தியாவின் 4-வது வெற்றியாகும். இது நமது வீரர்களின் அயராத அர்ப்பணிப்பு, கடுமையான பயிற்சி மற்றும் தளராத உறுதியை வெளிப்படுத்துகிறது. அவர்களின் அசாதாரண செயல்பாடு நாடு முழுவதும் மகத்தான பெருமை கொள்ள வைத்துள்ளது. எங்கள் வீரர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com