ஆசிய விளையாட்டு: தற்காப்பு கலையில் வெண்கலம் வென்ற பிங்கி

கடந்த 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் பிங்கி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
pinky palhara
Published on: 
Summary

ஆசிய விளையாட்டுப் போட்டியில் குராஷ் தற்காப்பு கலையில் இந்தியாவின் பிங்கி பல்ஹாரா வெண்கலம் வென்றார்.

ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானில் நடந்து வருகிறது.

இன்று நடைபெற்ற மகளிர் குராஷ் 78 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை பிங்கி பல்ஹாரா வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.

அரையிறுதி ஆட்டத்தில் பிங்கி பல்ஹாரா, தென் கொரியாவின் முன்னணி வீராங்கனையான சுமின் மோவை எதிர்கொண்டார்.

இறுதியில் பிங்கி பல்ஹாரா 0-5 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

அரையிறுதி வரை முன்னேறியதன் மூலம் பிங்கி பல்ஹாரா இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

கடந்த 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்த பிங்கி, இந்த ஆசிய போட்டியில் குராஷ் பிரிவில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளார்.

குராஷ் என்பது உஸ்பெகிஸ்தானில் தோன்றிய ஒரு பாரம்பரிய மல்யுத்த தற்காப்புக் கலை விளையாட்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா இதுவரை 4 தங்கம், 17 வெள்ளி, 18 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com