

ஜப்பானில் ஆசிய விளையாட்டு போட்டிக்கான தொடக்க விழாவில், இந்திய தேசிய கொடியை ஏந்தி செல்ல குண்டு எறிதல் வீரரான தஜிந்தர்பால் சிங் தூர் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், கடைசி நிமிட தாமதத்தால் அவருக்கு பதிலாக இந்திய குழுவை வழிநடத்த கபடி வீரரான பவர் செஹ்ராவத் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜப்பான் நாட்டில் உள்ள ஐச்சி நகோயாவில் 20-தாவது ஆசிய விளையாட்டு போட்டிகள் இன்று (19.09.2026) தொடங்கி அக்டோபர் 4ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இந்த போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய தடகள் அணி வீரர்கள், ஜப்பான் நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு தங்களின் உடலை பழக்கப்படுத்தும் வகையில், செப்டம்பர் 13 முதல் டோக்கியோவில் உள்ள சுகுபா பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் 2026 ஆசிய போட்டிகளுக்கான இந்தியா கொடியேற்றும் விழா இன்று நடைபெற உள்ளது. இந்திய அணியை வழிநடத்த குண்டு எறிதல் வீரரான தஜிந்தர்பால் சிங் தூர் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
இதையடுத்து சிங்கின் விளையாட்டு உபகரணங்கள் இன்று பிற்பகல் 3 மணிக்கு நகோயா விமான நிலையத்திற்கு வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தனது உபகரணங்களை வாங்கிக் கொண்டு, தொடக்க விழா நடைபெறும் இடத்திற்கு செல்ல குறைந்த நேரமே இருப்பதால், அவரால் அந்த விழாவில் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இந்திய ஒலிம்பிக் சங்கம், குண்டு எறிதல் வீரருக்கு பதிலாக 30 வயதான கபடி வீரரான பவன் செஹ்ராவத், துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான மானு பாகர் உடன் இணைந்து இந்திய அணியின் சார்பில் தேசிய கொடியை ஏந்தி செல்வார்கள் என அறிவித்துள்ளது.