

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ரோலக்ஸ் பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி தொடர் நடைபெற்றது. இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஸ்பெயினின் 23 வயது வீரர் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் பென் ஷெல்டனை எதிர்கொண்டார்.
மொத்தம் 2 மணிநேரம் நடந்த இந்த போட்டியில், அல்காரஸ் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடினார். 7-6 (7/5), 7-5 என்ற செட் கணக்கில் ஷெல்டனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். பாரீஸ் மாஸ்டர்ஸ் போட்டி தொடரில் முதன்முறையாக அவர் பெற்ற வெற்றி இதுவாகும். நடப்பு ஆண்டில் அவருடைய 9-வது பட்டம் ஆகும்.
இதனால், வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் 5 பட்டங்களை வென்று 2-வது இடத்தில் அவர் உள்ளார். 6 வெற்றிகளுடன், காயமடைந்த ஜானிக் சின்னர் முதல் இடத்தில் உள்ளார். வருகிற 15-ந்தேதி இத்தாலி நாட்டின் துரின் நகரில் நடைபெற உள்ள ஏ.டி.பி. பைனல்ஸ் போட்டி தொடரில் அல்காரஸ், வென்று சாம்பியன் பட்டம் வென்றால் முதல் இடத்திற்கு வரும் வாய்ப்பு உள்ளது.