பாரா ஆசிய போட்டி- உயரம் தாண்டுதலில் வெள்ளி பதக்கம் வென்றார் மாரியப்பன் தங்கவேலு

பாரா ஆசிய போட்டியில் பதக்க வேட்டையை இந்தியா தொடங்கியுள்ளது.ஆடவர் உயரம் தாண்டுதலில் 3 பதக்கங்களையும் கைப்பற்றியுள்ளது இந்தியா.
பாரா ஆசிய போட்டி- உயரம் தாண்டுதலில் வெள்ளி பதக்கம் வென்றார் மாரியப்பன் தங்கவேலு
Published on

சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் நேற்று முதல் பாரா ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. வரும் 28ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டில் இந்தியாவில் இருந்து 191 வீரர்கள், 112 வீராங்கனைகள் என மொத்தம் 303 பேர் கலந்துக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், பாரா ஆசிய போட்டியில் பதக்க வேட்டையை தொடங்கியுள்ளது இந்தியா.

இதில், ஆடவர் உயரம் தாண்டுதலில் சைலேஷ் குமார் தங்கம் வென்றுள்ளார். தொடர்ந்து, தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளி பதக்கம், ராம் சிங் வெண்கலம் வென்றார்.

ஆடவர் உயரம் தாண்டுதலில் 3 பதக்கங்களையும் இந்தியா வென்று அசத்தியுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com