

ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் கோல் கீப்பர் சவிதா புனியா புதிய சாதனை படைத்துள்ளார். இந்திய பெண்கள் ஹாக்கி வரலாற்றில் அதிக அளவில் சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்
321 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி, ஓய்வுபெற்ற மாபெரும் வீராங்கனை வந்தனா கட்டாரியாவின் முந்தைய சாதனையை இவர் முறியடித்துள்ளார். ஆசிய விளையாட்டி போட்டியில் பி பிரிவி ஆட்டத்தில் இந்தோனேசியாவுக்கு எதிராக இந்தியா 17-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றபோது அவர் இந்தச் சாதனையை முறியடித்துள்ளார்
36 வயதான சவிதா புனியா கடந்த 2009-ம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். 3 ஒலிம்பிக் போட்டிகள், 2 ஆசிய விளையாட்டு போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள், ஆசிய சாம்பியன்ஸ் டிராபி மற்றும் எஃப்.ஐ.எச். புரோ லீக் உள்ளிட்ட பல்வேறு தொடர்களில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார்.
இந்தியாவின் சுவர் என்று அழைக்கப்படும் சவிதா, பெனால்டி ஷூட்-அவுட் உள்ளிட்ட முக்கியமான தருணங்களில் சிறப்பான கோல் கீப்பிங்கால் கவனம் பெற்றவர்.
கடந்த செப்டம்பர் 20-ந்தேதி உஸ்பெகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 320-வது சர்வதேச போட்டியில் களம் இறங்கி வந்தனா கட்டாரியாவின் சாதனையை சமன் செய்தார். அடுத்த நாளே அந்த சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.
சவிதா புனியாவின் சாதனையை பாராட்டிய ஹாக்கி இந்தியா அமைப்பு ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய பெண்கள் அணி உஸ்பெகிஸ்தானை 19-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதைத் தொடர்ந்து, இந்தோனேசியாவையும் 17-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது.