தேசிய சப்-ஜூனியர் வாள்வீச்சு போட்டி- தமிழக அணிக்கு 5 பதக்கம்

வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி 2-வது இடத்தை பிடித்தது.பதக்கம் வென்ற சிறுவர், சிறுமியரை வாள்வீச்சு சங்கத்தின் அடாக் கமிட்டி தலைவர் வி. கருணாமூர்த்தி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
தேசிய சப்-ஜூனியர் வாள்வீச்சு போட்டி- தமிழக அணிக்கு 5 பதக்கம்
Published on

கொச்சி:

24-வது தேசிய சப்-ஜூனியர் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி கேரள மாநிலம் கொச்சியில் கடந்த 3 தினங்களாக நடந்தது. இதில் தமிழக அணி ஒட்டுமொத்தமாக 2-வது இடத்தை பிடித்தது. தமிழக அணிக்கு 5 பதக்கம் கிடைத்தது.

14 வயதுக்குட்பட்ட தனிநபர் பாயல் பிரிவில் நிபின்ராஜ் (கன்னியாகுமரி) வெண்கல பதக்கமும், அபிலின் ஷானு (கன்னியாகுமரி) சபரே பரிசுப் வெள்ளிப் பதக்கமும், பெஜினோ ஜிப்ரின் (கன்னியாகுமரி) வெண்கல பதக்கமும் பெற்றனர்.

14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பாயல் பிரிவில் தமிழக அணிக்கு (நிபின்ராஜ், ஆஸ்கெர், அகிலேஷ், திருக்குமரன்) வெண்கல பதக்கம் கிடைத்தது. அணிகள் சாப்ரே பிரிவில் வெள்ளிப்பதக்கம் (ஆஸ்பின், வினிஷ்குமார், ஷானு, நரேன்) கிடைத்தது.

பதக்கம் வென்ற சிறுவர், சிறுமியரை தமிழ்நாடு வாள்வீச்சு சங்கத்தின் அடாக் கமிட்டி தலைவர் வி.கருணாமூர்த்தி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com