தேசிய விளையாட்டு போட்டி: தமிழக அணிக்கு மேலும் 3 பதக்கம்

70 பதக்கத்துடன் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளது.நாளை தேசிய விளையாட்டு போட்டிகள் முடிகிறது.
தேசிய விளையாட்டு போட்டி: தமிழக அணிக்கு மேலும் 3 பதக்கம்
Published on

அகமதாபாத்:

36-வது தேசிய விளையாட்டுப்போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள 6 நகரங்களில் நடைபெற்று வருகிறது.

நேற்றைய போட்டியில் தமிழக அணிக்கு மேலும் 3 பதக்கம் கிடைத்தது.

சாப்ட் டென்னிஸ் போட்டியில் தமிழகத்துக்கு தங்கம் கிடைத்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் வேலூர் வீராங்கனை ராகஸ்ரீ மனோகர் பாபு முதல் இடத்தை பிடித்தார். மல்லர்கம்பம் பந்தயத்தில் தமிழக வீரர் ஹேம் சந்திரன் தங்கம் வென்றார். பெண்களுக்கான கால்பந்தில் வெண்கல பதக்கம் கிடைத்தது.

நேற்றைய போட்டி முடிவில் தமிழ்நாடு 24 தங்கம், 21 வெள்ளி, 25 வெண்கலம் ஆக மொத்தம் 70 பதக்கம் பெற்று 5-வது இடத்தில் இருக்கிறது.

சர்வீசஸ் 53 தங்கம் உள்பட 115 பதக்கத்துடன் முதல் இடத்தில் உள்ளது. மராட்டியம், அரியானா, கர்நாடகா முறையே அதற்கு அடுத்த நிலையில் உள்ளன. நாளை தேசிய விளையாட்டு போட்டிகள் முடிகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com