

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ரசிகர்களின் அமோகமான ஆதரவை பெற்றவருமான டோனி ஐ.பி.எல். போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
சி.எஸ்.கே. ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற அவர் இனி அணியின் ஆலோசகராக செயல்படுவார்.
இந்தநிலையில் டோனியை நினைத்து தான் பெருமைப்படுவதாக அவரது மனைவி சாக்ஷி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சாக்ஷி தனது சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-
அழகான புதிய அத்தியாயங்கள் தொடங்குவதற்கு, சில அத்தியாயங்கள் முடிவுக்கு வந்தே ஆக வேண்டும்.
பல ஆண்டுகளாக டோனியை நேசித்து, ஆதரித்து, அவர் மீது நம்பிக்கை வைத்திருந்த அனைவருக்கும் நாங்கள் உங்களை நேரில் அறிந்து இந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி உங்கள் அனைவருக்கும் எங்கள் இதயத்தின் ஆழத்தில் இருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
நீங்கள் அளித்த அன்புக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளோம். புதிய தொடக்கங்கள், புதிய சாகசங்கள் மற்றும் இன்னும் பல அழகான நினைவுகள் அமையட்டும்.
உங்களை (டோனி) குறித்து நான் எப்போதும் மிகுந்த பெருமிதம் கொள்கிறேன்.
இவ்வாறு சாக்ஷி அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
டோனி ஒரு வெற்றிகரமாக கேப்டனாக இருந்தார். புகழ்பெற்ற 7-ம் நம்பர் கொண்ட ஜெர்சியை அணிந்து அடையாளமான மஞ்சள் நிற சீருடையில் ஆடினார்.
அவர் இனி விளையாட போவதில்லை என்றாலும், அவர் ஆடிய காலத்தில் இருந்த அதே சூழல் சேப்பாக்கம் மைதானத்தில் தொடர்ந்து நிலவும் என்று நான் நினைக்கிறேன்.
இளம் வீரர்களுக்கு பயன் அளிக்கும் டோனி ஆலோசகராக இருப்பது எதிர்கால இளம் வீரர்களுக்கு மிகுந்த பயனை அளிக்கும். அவர் 15 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தினார்.
சி.எஸ்.கே. அணியின் கேப்டனாக அவர் பல வீரர்களுக்கு உத்வேகமாக திகழ்ந்தார். மிக சிறந்த வீரராக அவர் இருந்தார்.
வீரர்களுக்கான அறையில் இனி டோனி இருப்பதன் மூலம் இந்திய கிரிக்கெட்டுக்கும், சர்வதேச கிரிக்கெட்டுக்கும் இன்னும் பெரிய பங்களிப்பை வழங்க முடியும்.
பாகிஸ்தானை தவிர மற்ற அனைத்து நாடுகளை சேர்ந்த வீரர்களும் ஐ.பி.எல். போட்டியில் விளையாடுகிறார்கள். அதனால் தான் நான் சர்வதேச கிரிக்கெட் என்று குறிப்பிடுகிறேன். டோனிக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர் ஒரு உண்மையான இந்திய வீரர்.
இவ்வாறு டோனியை வெகுவாக ரஷீத் லத்தீப் புகழ்ந்து உள்ளார்.
ஆஸ்திரேலிய முன்னாள் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா கூறியதாவது:-
இந்திய அணியில் நான் மிகவும் நேசித்த நபர் டோனி ஆவார். எனது மனதில் அவர் மீது எவ்வளவு அன்பும், மரியாதையும் இருக்கிறது என்பது டோனிக்கே தெரிந்து இருக்குமா என்று தெரியவில்லை. நான் அதை அவரிடம் ஒரு போதும் கூறியது கிடையாது.
அவர் அணி வீரர்கள் பஸ்சில் இருந்து இறங்கினால் போதும் டோனி, டோனி, டோனி என்ற முழக்கம் விண்ணை பிளக்கும். ஓட்டலில் இருந்து வெளியே வரும் போதும், மைதானத்துக்குள் நுழையும் போதும் இதே நிலைதான். டோனி ஒரு சகாப்தம். அவர் அனைவருக்கும் வழிகாட்டி.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் பல்வேறு வீரர்களும் மற்றும் பல தரப்பினரும் டோனியை புகழ்ந்துள்ளனர்.