ஆசிய விளையாட்டு: பளு தூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானு

ஜப்பானில் நகோயாவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன.
mirabai chanu
Published on
Summary

ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான பளு தூக்குதலில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஜப்பானில் நகோயாவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இந்தத் தொடரில் இந்தியா, ஜப்பான், சீனா, தென்கொரியா, தாய்லாந்து உள்பட 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், மகளிருக்கான பளு தூக்குதல் போட்டி இன்று நடந்தது. இதில், 49 கிலோ பிரிவில் கலந்துகொண்ட இந்திய வீராங்கனை மீராபாய் சானு, 198 கிலோ எடையைத் தூக்கி வெள்ளி பதக்கம் வென்றார்.

வடகொரிய வீராங்கனை தங்கப் பதக்கமும், இந்தோனேசிய வீராங்கனை வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

இந்திய அணி துப்பாக்கிச் சுடுதலில் 4 வெள்ளி, பளு தூக்குதலில் ஒரு வெள்ளி என மொத்தம் 5 வெள்ளிப் பதக்கங்களை கைப்பற்றி உள்ளன.

ஏற்கனவே ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ள மீராபாய் சானு, ஆசிய விளையாட்டு போட்டியில் முதல் முறையாக வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com