எம்.சி.சி - முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி: சென்னையில் நாளை தொடக்கம்

நவம்பர் 1-ந்தேதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது.
HOCKEY
Published on: 

எம்.சி.சி. (மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்) - முருகப்பா குழுமம் சார்பில் சென்னையில் ஆண்டு தோறும் அகில இந்திய ஆக்கி போட்டி நடைபெற்று வருகிறது.

அகில இந்திய ஆக்கி

97-வது அகில இந்திய எம்.சி.சி. - முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதா கிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை (22-ந்தேதி) தொடங்குகிறது. நவம்பர் 1-ந்தேதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது.

இதில் 10 அணிகள் பங்கேற்கின்றன. அவை 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியன் ரெயில்வே, இந்திய ராணுவம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி.), பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆக்கி கர்நாடகா ஆகிய அணிகளும் ‘பி’ பிரிவில் இந்திய கடற்படை, மலேசிய ஆக்கி கூட்டமைப்பு ஜூனியர், இந்திய விளையாட்டு ஆணையம் (போபால்), பாரத் பெட்ரோலியம், கார்ப்பரேஷன், ஆக்கி தமிழ்நாடு ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

பரிசுத்தொகை

லீக் மற்றும் நாக்அவுட் முறையில் போட்டி நடைபெறுகிறது. லீக் முடிவில் 2 பிரிவுகளிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ.7 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும். 2-வது இடத்திற்கு ரூ.5 லட்சம் கிடைக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com