வீடியோ: மலேசிய ஓபன் பேட்மிண்டன்: தண்ணீர் கொட்டியதால் தடைப்பட்ட இந்திய வீரரின் ஆட்டம்

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை பிரனோய் 21-12 என்ற கணக்கில் வென்றார்.2-வது செட் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அரங்கத்தின் மேல்கூறையில் இருந்து தண்ணீர் கொட்டியது.
வீடியோ: மலேசிய ஓபன் பேட்மிண்டன்: தண்ணீர் கொட்டியதால் தடைப்பட்ட இந்திய வீரரின் ஆட்டம்
Published on

கோலாலம்பூர்:

மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் இன்று தொடங்கி 12-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் 'சிக்கன் குனியா' பாதிப்பில் இருந்து மீண்டு 5 மாத இடைவெளிக்கு பிறகு களம் திரும்பும் 32 வயது இந்திய வீரர் பிரனாய், முதல் ஆட்டத்தில் பிரையன் யங்கை (கனடா) சந்திக்கிறார்.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை பிரனோய் 21-12 என்ற கணக்கில் வென்றார். அடுத்த செட் நடைபெற்றுக் கொண்டிருந்த போது உள்விளையாட்டு அரங்கத்தின் மேல்கூறையில் இருந்து தண்ணீர் கொட்டியது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com