கணவரிடம் இருந்து விவாகரத்து பெறுவதாக மேரி கோம் அறிவிப்பு

தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெறுவதாக மேரி கோம் அறிவித்துள்ளார். மேரி கோமின் கணவர் ஓன்லர் மணிப்பூர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
கணவரிடம் இருந்து விவாகரத்து பெறுவதாக மேரி கோம் அறிவிப்பு
Published on

மணிப்பூரை சேர்ந்த மேரி கோம் மகளிர் குத்துச்சண்டை போட்டிகளில் 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர். ஒலிம்பிக்கில் பங்கேற்று இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கம் வென்றவர்.

குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோமும், கணவர் ஓன்லரும் பிரிந்துவிட்டதாக அண்மையில் தகவல் வெளியானது.

இந்நிலையில், தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெறுவதாக மேரி கோம் அறிவித்துள்ளார். அது இச்சமயம் மற்றொரு வீராங்கனையின் கணவருடன் தான் டேட்டிங் செய்வதாக வெளியான தகவலையும் மேரி கோம் மறுத்துள்ளார்.

மேரி கோமின் கணவர் ஓன்லர் மணிப்பூர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதனால் 3 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாம். இதனாலும் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தற்போது மேரி கோம் தன் 4 பிள்ளைகளுடன் பரிதாபாத்திலும், அவரது கணவர் ஓன்லர் டெல்லியிலும் தனித்தனியே வசித்து வருகிறார்கள். 

X

Maalai Malar
www.maalaimalar.com