கர்ப்பமான பிரபல டென்னிஸ் வீராங்கனை

தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டிருந்தார்.
நிச்சயிக்கப்பட்டவருடன் மரியா ஷரபோவா
நிச்சயிக்கப்பட்டவருடன் மரியா ஷரபோவா
Published on

பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார். 

மரியா ஷரபோவா 2018  ஆண்டு முதல் பிரிட்டிஷ் தொழிலதிபர் அலெக்சாண்டர் கில்க்ஸ் என்பவரை காதலித்து வந்தார். பின் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து நிச்சயம் செய்தனர். அதே ஆண்டில் ஷரபோவா டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வையும் அறிவித்தார். இந்நிலையில் தற்போது மரியா தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார்.

நேற்று தனது 35-வது பிறந்தநாளை கொண்டாடிய மரியா ஷரபோவா இன்ஸ்டாகிராமில் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, ’விலைமதிப்பற்ற தொடக்கங்கள். இரண்டு பேருக்கும் சேர்த்து பிறந்தநாள் கேக்கை உண்கிறேன்’ என கூறியுள்ளார்.

மரியா ஷரபோவா தனது டென்னிஸ் வாழ்க்கையில் நம்பர் 1 வீராங்கனையாக திகழ்ந்தார். டென்னிஸில் 4 கிராண்ட் ஸ்லாம் கோப்பைகளை வென்ற 10 வீராங்கனைகளில் இவரும் ஒருவர். இவர் 5 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் பெற்றுள்ளார். இதுவரை மரியா, 30 மில்லியன் டாலர் மதிப்பிலான பரிசுத்தொகைகளை வென்றுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com