

உலக சாம்பியன்ஷிப் மல்யுத்தம் கஜகஜஸ்தான் தலைநகர் அஸ்டானாவில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான 59 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மணிஷா பன்வாலா, அமெரிக்காவைச் சேர்ந்த அபிகெய்ல் நெட்டே-வை எதிர்கொண்டார்.
ஒரு கட்டத்தில் மணிஷா பன்வாலா 0-6 என பின்தங்கியிருந்தார். பின்னர் 8-6 என வெற்றி பெற்றார். இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக 2010-ம் ஆண்டு ஆண்கள் 66 கிலோ எடைப்பிரிவில் சுஷில் குமார் தங்கம் வென்றிருந்தார். அதன்பின் தங்கம் வெல்லும் இந்தியர் இவர்தான்.
நீலம் ஷிரோஹி (50 கிலோ), காஜல் தோசாக் (76) ஆகியோரும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தனர். ஆனால், தோல்வியடைந்து அவர்கள் வெள்ளிப் பதக்கம் வென்றனர். தான்மு ஷர்மா வெண்கல பதக்கம் வென்றார். மணிஷா பன்வாலா அரையிறுதியில் கஜகஜஸ்தானி் அல்டின் ஷகாயேவா-வை வீழ்த்தினார்.