Malaysia Masters: முதல் சுற்றில் மாளவிகா பன்சோத், அஷ்மிதா வெற்றி

இந்தியாவின் அஷ்மிதா முதல் சுற்றில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
Malaysia Masters: முதல் சுற்றில் மாளவிகா பன்சோத், அஷ்மிதா வெற்றி
Published on

மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது.

இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், ஜெர்மனியின் யுவோன் லீ உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய மாளவிகா பன்சோத் 21-17, 16-21, 21-9 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் அஷ்மிதா 21-16, 21-13 என்ற செட் கணக்கில் இந்தோனேசிய வீராங்கனையான ராமதானி விர்யாவனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com