தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: மாளவிகா பன்சோத், தேவிகா சிஹாக் முதல் சுற்றில் வெற்றி

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் பாங்காங்கில் நடந்து வருகிறது.
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: மாளவிகா பன்சோத், தேவிகா சிஹாக் முதல் சுற்றில் வெற்றி
Published on

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் பாங்காங்கில் நடந்து வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், கனடாவின் வென் யூ ஜாங் உடன் மோதினார்.

இதில் முதல் செட்டை 13-21 என இழந்த மாளவிகா பன்சோத் சிறப்பாக ஆடி அடுத்த இரு செட்களை 26-24, 21-13 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் தேவிகா சிஹாக் 21-19, 13-21, 21-15 என்ற செட் கணக்கில் ஜப்பானின் நட்சுகி நிடைராவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com