ஹைலோ ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறிய மாளவிகா, ஆயுஷ் ஷெட்டி

ஜெர்மனியில் ஹைலோ ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, மாளவிகா அரையிறுதிக்கு முன்னேறினர்.
ஹைலோ ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறிய மாளவிகா, ஆயுஷ் ஷெட்டி
Published on

சார்புரூக்கன்:

ஜெர்மனியில் ஹைலோ ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.

இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, பின்லாந்தின் கல்லே கோல்ஜோனென் மோதினர்.

இதில்ஆயுஷ் ஷெட்டி 21-18, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இந்தப் போட்டி மொத்தம் 41 நிமிடம் நீடித்தது.

பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், வியட்நாமின் துய் லின் குயென் மோதினர்.

இதில் அபாரமாக ஆடிய மாளவிகா 21-15, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com