டாடா ஸ்டீல் செஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்

நடப்பு ஆண்டில் கார்ல்சன் வென்ற 10-வது பட்டம் இதுவாகும்.ரேபிட் பிரிவிலும் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.
டாடா ஸ்டீல் செஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
Published on

கொல்கத்தா:

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் டாடா ஸ்டீல் இந்தியா சர்வதேச செஸ் தொடர் நடைபெற்றது. இதில் பிளிட்ஸ் பிரிவு 18 சுற்றுகளாக நடந்தது.

இதில் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், இந்தியாவின் பிரக்ஞானந்தா உள்பட பலர் பங்கேற்று விளையாடினர்.

இந்நிலையில், 18 சுற்றுகளின் முடிவில் 9 வெற்றி, 8 டிரா, ஒரு தோல்வி என 13 புள்ளிகளுடன் நார்வேயின் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றார். நடப்பு ஆண்டில் கார்ல்சன் வென்ற 10-வது பட்டம் இதுவாகும்.

ஏற்கனவே இந்தத் தொடரின் ரேபிட் பிரிவிலும் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com