

ஐபிஎல் 2026 தொடரின் 5-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ டெல்லி அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 18.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டையும் இழந்து 141 ரன்களை எடுத்துள்ளது. தொடர்ந்து டெல்லி 142 ரன்களை இலக்காக கொண்டு விளையாடி வருகிறது.
லக்னோ தரப்பில் அதிகபட்சமாக அப்துல் சமத் 36 ரன்கள் எடுத்தார். டெல்லி தரப்பில் லுங்கி இங்கிடி, நடராஜன் தலா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும், அக்ஷர் படேல் 1 விக்கெட்டும் எடுத்தார்.