ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - லவ்லினா, பர்வீன் ஹூடா தங்கம் வென்றனர்

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் லவ்லினா, பர்வீன் ஹூடா ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர், இப்போட்டியில் இந்தியாவின் மீனாட்சி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
வெற்றி பெற்ற லவ்லினா
வெற்றி பெற்ற லவ்லினா
Published on

ஜோர்டான்:

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்யன்ஷிப் போட்டி ஜோர்டானில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டிகள் இன்று தொடங்கியது.

இந்த தொடரில் 75 கிலோ எடைப்பிரிவில் பெண்களுக்கான இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. அந்த வகையில் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹைன் (75 கிலோ) இன்று உஸ்பெகிஸ்தானின் ருஸ்மெடோவா சொகிபாவை எதிர்கொண்டார்.

போட்டியின் ஆரம்பத்திலிருந்தே தனது புத்திசாலித்தனமான நுட்பங்களையும் உத்திகளையும் திறம்பட பயன்படுத்திய லவ்லினா இறுதியில் 5-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

இதேபோல், 63 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் பர்வீன் ஹூடா, ஜப்பான் வீரர் கிடோ மாயை எதிர்கொண்டார். இதில் 5-0 என்ற கணக்கில் பர்வீன் ஹூடா வென்று தங்கம் கைப்பற்றினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com