

போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இரண்டாம் பாதியில் 48வது நிமிடத்தில் மெஸ்ஸி அளித்த கார்னர் கிக் வாய்ப்பைப் பயன்படுத்தி நிகோலஸ் ஒட்டமெண்டி முதல் கோலை அடித்தார்.
அர்ஜென்டினா கால்பந்து அணியின் உலக புகழ்பெற்ற நாயகன் லியோனல் மெஸ்ஸி,தனது 21 ஆண்டுகால சர்வதேச கால்பந்து வாழ்க்கைக்கு உணர்ச்சிப்பூர்வமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.புவெனஸ் அயர்ஸில் உள்ள எஸ்டாடியோ மொனுமென்டல் மைதானத்தில் நடைபெற்ற பெனின் அணிக்கு எதிரான நட்புரீதியிலான போட்டியில் அர்ஜென்டினா 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.'தி லாஸ்ட் டாங்கோ'என்று பெயரிடப்பட்ட இந்த விடைபெறும் போட்டியில் மெஸ்ஸி ஒரு கோல் அடித்ததுடன், மற்ற இரு கோல்களுக்கு அசிஸ்ட் செய்து ஆட்டநாயகனாகத் திகழ்ந்தார்.
போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இரண்டாம் பாதியில் 48வது நிமிடத்தில் மெஸ்ஸி அளித்த கார்னர் கிக் வாய்ப்பைப் பயன்படுத்தி நிகோலஸ் ஒட்டமெண்டி முதல் கோலை அடித்தார்.தொடர்ந்து 61வது நிமிடத்தில் மெஸ்ஸி வழங்கிய பாஸை நிகோ பாஸ் கோலாக மாற்றினார்.
ஆட்டத்தின் 71வது நிமிடத்தில் அர்ஜென்டினாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த அந்த வரலாற்றுச் தருணத்தில், மெஸ்ஸி பந்தை வலைக்குள் தள்ளி தனது சர்வதேச வாழ்க்கையின் 126வது கோலை பதிவு செய்தார். இதனால் மைதானத்தில் இருந்த 85,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் "மெஸ்ஸி, மெஸ்ஸி" என முழக்கமிட்டனர்.
போட்டி முடிந்த பிறகு மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்களிடம் லியோனல் மெஸ்ஸி கண்ணீருடன் உரையாற்றினார். "அர்ஜென்டினா தேசிய அணிக்காக விளையாடுவதை விட அழகானது எதுவுமில்லை. எப்போதும் இங்கேயே வந்து விளையாடிக்கொண்டே இருக்க விரும்புகிறேன்.ஆனால், இப்போது எனது வாழ்க்கையின் மிகவும் துயரமான நாளை எதிர்கொள்கிறேன். தேசிய அணிக்கு விடைபெறுகிறேன், உங்கள் அனைவரையும் மிகவும் மிஸ் செய்வேன்.
ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே மைதானத்திற்கு வந்த பேருந்தில் இருந்தபோதே மெஸ்ஸி உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தினார். தேசிய கீதம் இசைக்கப்பட்டபோதும் மெஸ்ஸியும் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனியும் கண்ணீர் விட்டனர். 10வது நிமிடத்தில் மெஸ்ஸியைக் கௌரவிக்கும் வகையில் ஆட்டம் சில நொடிகள் நிறுத்தப்பட்டு,மைதானத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டி மரியாதை செலுத்தினர்.
39 வயதான லியோனல் மெஸ்ஸி அர்ஜென்டினா அணிக்காக 208 போட்டிகளில் விளையாடி 126 கோல்களை அடித்துள்ளார். 2022ல் உலகக்கோப்பை, இரண்டு கோபா அமெரிக்கா பட்டங்கள் (2021, 2024) ஆகியவற்றை அர்ஜென்டினாவுக்கு பெற்றுத் தந்துள்ளார். அர்ஜென்டினா அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடியவர் மற்றும் அதிக கோல்கள் அடித்தவர் என்ற பெருமைக்குரிய மெஸ்ஸி, சர்வதேச அளவில் ஃபிரான்சிஸ் கோல்களுக்கு பிறகு கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு (146 கோல்கள்) அடுத்தபடியாக அதிக கோல்கள் அடித்த வீரராக சர்வதேச பயணத்தை நிறைவு செய்துள்ளார்.