ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: அரையிறுதியில் லக்ஷயா சென் தோல்வி

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இத்தொடரில் இந்தியாவின் லக்‌ஷயா சென் அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: அரையிறுதியில் லக்ஷயா சென் தோல்வி
Published on

பர்மிங்காம்:

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், இந்தோனேசிய வீரர் கிறிஸ்டியுடன்

மோதினார்.

இதில் லக்ஷயா சென் 12-21 என முதல் செட்டை இழந்தார். அடுத்த செட்டை 21-10 என கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது சுற்றில் கிறிஸ்டி 21-15 என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இறுதியில், லக்ஷயா சென் 12-21, 21-10, 15-21 என்ற செட் கணக்கில் தோற்று தொடரில் இருந்து வெளியேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com