இந்திய ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் லக்ஷயா சென் அதிர்ச்சி தோல்வி

இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது. காலிறுதி சுற்றில் இந்தியாவின் லக்‌ஷயா சென் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
இந்திய ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் லக்ஷயா சென் அதிர்ச்சி தோல்வி
Published on

புதுடெல்லி:

இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. வரும் 18-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் பிவி சிந்து உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், தைவானின் லின் சூ யீ உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் முதல் செட்டை 21-17 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட தைவான் வீரர் அடுத்த இரு செட்களை 21-13, 21-18 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் லக்ஷயா சென் தொடரில் இருந்து வெளியேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com