ஜப்பான் பேட்மிண்டன்: முதல் சுற்றில் லக்ஷயா சென் அதிர்ச்சி தோல்வி

குமாமோட்டோ மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜப்பானில் நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
ஜப்பான் பேட்மிண்டன்: முதல் சுற்றில் லக்ஷயா சென் அதிர்ச்சி தோல்வி
Published on

குமாமோட்டோ:

குமாமோட்டோ மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜப்பானில் நடந்து வருகிறது. இந்தியா சார்பில் பி.வி.சிந்து, லக்ஷயா சென் உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்ஷயா சென், மலேசியாவின் லியோங் ஜுன் ஹா உடன் மோதினார். இதில் லக்ஷயா சென் 22-20, 17-21, 16-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி முதல் சுற்றில் தோல்வி அடைந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com