ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: 2வது சுற்றுக்கு முன்னேறினார் லக்சயா சென்

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி குமாமோட்டோ நகரில் நடந்து வருகிறது.
lakshya sen
Published on: 
Summary

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென் வெற்றி பெற்றார்.

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி குமாமோட்டோ நகரில் நடந்து வருகிறது.

இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் இன்று நடந்தது. இதில் இந்தியாவின் லக்சயா சென், சீன தைபேயின் சீ யூ ஜென் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய லக்சயா சென் 21-19, 21-18 என்ற புள்ளிக்கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் காயத்ரி- திரிஷா ஜாலி இணை வென்றது.

இதேபோல், ஆண்கள் இரட்டையர் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ஹரிகரன் அம்சகருணன்-எம்.ஆர்.அர்ஜூன் ஜோடி வென்றது.

X