

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் காலிறுதி சுற்றுக்கு இந்தியாவின் லக்சயா சென், கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் முன்னேறினர்.
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி குமாமோட்டோ நகரில் நடந்து வருகிறது.
இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டம் நடந்தது. இதில் இந்தியாவின் லக்சயா சென், சீனாவின் டாங் டியான் யாவ் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய லக்சயா சென் 21-8, 21-14 என்ற புள்ளிக்கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-15, 11-21, 21-18 என்ற செட் கணக்கில் ஜப்பானின் கோடை நரோகாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
பெண்கள் இரட்டையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் காயத்ரி- திரிஷா ஜாலி ஜோடி தோல்வி அடைந்தது.